நீலாய், செப்.7-
மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் அமைப்பான மிம்கோய்னின் 5ஆம்ஆண்டு எஸ்எம்இ மாநாடு எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதன்தலைவர் டத்தோ பி.வி.அப்துல் அமிட் தெரிவித்தார்.
இந்த மாநாட்டிற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 500 பேராளர்கள் கலந்து கொள்வார்கள்என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அதே நாளில் இரவு ‘கோல்டன் டினார் அவார்ட்ஸ்’ எனும் சிறப்பு விருதுநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. வர்த்தகத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு சாதனைபடைத்தவர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் இந்த விருது நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மிம்கோய்ன் ஏற்பாட்டில் இதற்கு முன்னர் நடைபெற்ற விருது நிகழ்ச்சிகளில் துணைப்பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தமிழகத்தைச் சேர்ந்ததொழிலதிபர்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதாக டத்தோஅமிட் தெரிவித்தார்.
முதல் ஆண்டிலிருந்தே வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சிறப்பாகச் செயல்படும்தனிநபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆரம்ப கட்டத்தில் சுமார் 35 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு தவணைகளில் சீன மற்றும் மலாய் சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கும்தொழில்முனைவோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டதாகக் கூறிய அவர், இம்முறையும் இனவேறுபாடின்றி அனைத்து இனங்களையும் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும்தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
மலேசியாவின் வர்த்தகச் சூழலில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர்ஆற்றிவரும் பங்களிப்பை அங்கீகரிப்பதுடன், அவர்களின் வெற்றிக் கதைகளைமற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாகக் கொண்டு செல்வதே இத்தகைய விருதுநிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மிம்கோய்ன் ஏற்பாடு செய்யும் எஸ்எம்இ மாநாட்டில் கலந்து கொள்ளவிரும்புவோர் இணையம் வழியாக தங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் டத்தோஅமிட் தெரிவித்தார்.
இதற்கிடையே, மிம்கோய்னின் ஆண்டுக் கூட்டம் எதிர்வரும் அக்டோபர் 28ஆம் தேதிநடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மிம்கோய்னுக்கு தேர்தல் ஆண்டாக இருப்பதால், அனைத்து உறுப்பினர்களும்ஆண்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் அடுத்த கட்டதிட்டங்கள் குறித்து ஆண்டுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர்கூறினார்.
மிம்கோய்னின் வளர்ச்சியிலும் எதிர்கால செயல்பாடுகளிலும் உறுப்பினர்களின் ஒற்றுமையும்பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என்பதால், அனைத்து உறுப்பினர்களும் தேர்தல்ஆண்டான இந்த ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கடமையை நிறைவேற்றவேண்டும் என டத்தோ அமிட் கேட்டுக்கொண்டார்.
0 Comments