திருப்பத்தூர், செப். 5:
திருப்பத்தூர் தென்மாப்பட்டு கே.எம். ரோடு பகுதியைச் சேர்ந்தவரும், மறைந்த என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை – சீதையம்மாள் தம்பதியின் மருமகனும், திருமதி தங்க நாச்சியார் அம்மாளின் கணவரும், 7சி.எஸ். எண்டர்டெய்மண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகியுமான ம. பழனிகுமார் பிள்ளை காலமானார். அவருக்கு வயது 76.
மறைந்த மாணிக்கம் பிள்ளை – மனோன்மணி அம்மாள் தம்பதியின் மூத்த மகனான இவர், திரு. மாணிக்ககுமார் மற்றும் திரு. ஆறுமுககுமார் ஆகியோரின் தந்தையாவார்.
உடல்நலக் குறைவின்றி இயற்கை எய்திய அவரது இறுதிச்சடங்கு நேற்று (செப். 4) மாலை 4 மணியளவில் திண்டுக்கல் ரோடு, காரையூர் தோட்டத்தில் நடைபெற்றது.
அவரது மறைவுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
-பி.மலையாண்டி
0 Comments