ஈப்போ, செப் 2-
இங்குள்ள ஜாலான் பூரோங் பெலிபிஸ் (இந்தான் பிஸ்னஸ் செண்டர்) முன்னிலையில் கடந்தஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று 73 வயதுடைய லாம் சூங் வோங் வாகனம் ஒன்றினால்மோதப்பட்டதை தொடர்ந்து மரணம் அடைந்தார்.
அச்சம்பவம் இரவு 8.30 மணிக்கு நிகழ்ந்தது.
அவருடைய மரணம் தொடர்பாக அவரை மோதிச் சென்ற வாகனத்தை தேடி வருகிறோம்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை விசாரணை செய்தால் பாதிப்பட்டகுடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும் என ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ்ஹியான் தெரிவித்தார்.
மேலும் , அங்குள்ள பகுதியில் ரகசிய கேமராக்கள் இருந்தால் யாரேனும் முன் வரலாம்என்றார்.
பொறுப்பில்லாத மோதி சென்ற வாகன ஓட்டுனர் அடையாளம் காணப்பட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்
0 Comments