loader
பேராக் மாநிலத்திற்கு சுக்மாவில் தங்கம் வென்ற‌ கராத்தே வீரர் பெட்ரிக் ஜெயராஜ் -பாராட்டிய கலைமுகிலன்

பேராக் மாநிலத்திற்கு சுக்மாவில் தங்கம் வென்ற‌ கராத்தே வீரர் பெட்ரிக் ஜெயராஜ் -பாராட்டிய கலைமுகிலன்

ஈப்போ, செப்.2

பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவர்கள் விளையாட்டாக இருப்பது இயல்பானதாகஇருந்தாலும் நம்மிடம் இருக்கும் திறமையை வளர்த்து கொள்ள பள்ளி பருவமே சரியானதருணம் என்பதினை புந்தோங்கை சேர்ந்த பெட்ரிக் ஜெயராஜ்‌ மார்டின் நிரூபித்துள்ளார்.

 

அண்மையில் நடைபெற்ற சுக்மா போட்டியில் கராத்தே போட்டியில் பேராக் மாநிலத்திற்குபெட்ரிக் தங்கம் பெற்று தந்துள்ளார்.

 

அவருடைய வெற்றியை பாராட்டி தம்பூன் பி.கே.ஆர். தொகுதியின் துணைத் தலைவர்அ.கலைமுகிலன் நேரடியாக பெட்ரிக்கை சந்தித்தார்.

 

மேலும் தன்னால் இயன்ற சன்மானம் ஒன்றை வழங்கி அந்த விளையாட்டு வீரருக்குஉற்சாகம்‌ மூட்டினார்.

 

அன்று பேராக்கில் ஏராளமான திறமையான விளையாட்டாளர்கள் இருந்தனர். மீண்டும் அதேபோல் பேராக்கில் திறமையான,  விளையாட்டாளர்கள் உருவாக வேண்டும் எனகலைமுகிலன் கூறினார்.

 

 தொடர்ந்து , நம் இளைஞர்கள் சாதித்தால் நாம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதுமுக்கியம் என்றார்.

 

பெட்ரிக் போல் நம்‌ பிள்ளைகளை சாதிக்க வேண்டும்‌ என‌ அவர்‌ கேட்டுக் கொண்டார்

0 Comments

leave a reply

Recent News