loader
நேபாளத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள 91 மலேசியர்களைக் கண்டறிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் – யுனேஸ்வரன் ராமராஜ்*

நேபாளத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள 91 மலேசியர்களைக் கண்டறிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் – யுனேஸ்வரன் ராமராஜ்*

கோலாலம்பூர்:

 

நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்டபேரிடரில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள 91 மலேசியர்கக் கண்டறிய அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டுத் துணையமைச்சர்யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.

 

ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளத்தின் ராசுவா மற்றும் திபெத்தின் கியிரோங் அல்லது கெருங்பகுதிகளைத் தாக்கிய இந்தப் பேரிடரில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

விஸ்மா புத்ராவின் ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 8 மணி நிலவரப்படி, நேபாளத்தில் 55 மலேசியர்களும், சீனாவில் 36 மலேசியர்களும் இன்னும் தொடர்பு கொள்ள முடியாதநிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளவர்களில் சுற்றுலாப் பயணிகள், மலையேறுபவர்கள், கைலாயமலைக்குச் சென்ற சமய யாத்திரிகர்கள் மற்றும் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையைச்சேர்ந்த இரு அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொருவரும் அவர்களது குடும்பங்களுக்கு முக்கியமானவர்கள் என்பதால், அவர்களின்குடும்பத்தினருக்கு தகவல்கள் நேரடியாகவும், சீரான இடைவெளியிலும், தொடர்ந்துவழங்கப்படுவதை விஸ்மா புத்ரா உறுதி செய்ய வேண்டும் என யுனேஸ்வரன் தெரிவித்தார்.

 

குடும்பங்களுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவையுடன் கூடிய சிறப்பு ஒருங்கிணைப்புமையம் அமைத்தல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட தொடர்பு அதிகாரியைநியமித்தல் மற்றும் தினசரி குறிப்பிட்ட நேரத்தில் தகவல் விளக்கங்களை வழங்குதல்உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.

 

மேலும், விஸ்மா புத்ரா, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA), மலேசியதீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), நேபாளம் மற்றும் சீன அதிகாரிகள், சுற்றுலாநிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையிலானஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

மலேசியாவின் சிறப்பு மீட்புக் குழுவான STORM-ஐ அனுப்புவதற்கான அனைத்துஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வகோரிக்கை மற்றும் அனுமதி கிடைத்தவுடன் தாமதமின்றி குழுவை அனுப்பக்கூடியவகையில் தேவையான ஏற்பாடுகளை முடிக்க வேண்டும் என்றும் யுனேஸ்வரன்தெரிவித்தார்.

 

அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உளவியல் மற்றும் சமூக ஆதரவுவழங்குவதுடன், தேவையான குடும்ப உறுப்பினர்கள் நேபாளம் அல்லது சீனாவுக்குச்செல்வதற்கான ஆவணங்கள், பயணம் மற்றும் தளவாட உதவிகளையும் அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

சரிபார்க்கப்படாத எண்ணிக்கைகள், புகைப்படங்கள் அல்லது தகவல்களை சமூகஊடகங்களில் பரப்ப வேண்டாம் என பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொண்டயுனேஸ்வரன், இதுபோன்ற நேரத்தில் குடும்பங்களுக்கு மேலும் வேதனையைஏற்படுத்தக்கூடிய ஊகத் தகவல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

“இந்த நேரத்தில் இனம், மதம் அல்லது அரசியல் வேறுபாடுகள் இல்லை. தங்களதுஅன்புக்குரியவர்களின் பாதுகாப்பான வருகைக்காகக் காத்திருக்கும் மலேசியர்கள் மட்டுமேஉள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 

தொடர்பு கொள்ள முடியாதுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாகக்கண்டுபிடிக்கப்பட வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கும் பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளம் மற்றும் திபெத் மக்களுக்கும் ஆழ்ந்தஅனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News