ரவாங், ஆக.1-
ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அனுமதி கிடைத்துள்ள நிலையில் அது ஒரு வரவேற்க கூடிய விஷயமாக இருந்தாலும் அந்த கட்டுமானத்திற்காக மாணவர்கள் விளையாட இருக்கும் திடலை பலி கொடுப்பது நியாமான செயல் இல்லை என பெற்றோர்கள் தமிழ் லென்ஸ்சிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இருக்கும் ஒரே திடலை தாரைவாத்து கொடுத்து விட்டு மாணவர் எங்கும் போய் விளையாடுவார்கள்? இருப்பதே ஒரு சிறிய திடல் அதையும் கூறுபோடுவது நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
திடலுக்கு அருகே பலகையில் ஒரு மோசமான சூழலில் இருக்கும் கட்டடத்தை உடைத்து அங்கு 3 அல்லது 4 மாடியில் கட்டடத்தை கட்டுங்கள்.
அதை விடுத்து திடலில் கை வைப்பது ஏன் ? திடலை இழந்து மாணவர்கள் விளையாட ,பயிற்சி எடுக்க எங்கே செல்வார்கள்? பக்கத்து பள்ளியில் கையேந்தி நிற்கும் சூழலை தயவு செய்து உருவாக்கி விடாதீர்கள்.
கல்வி அமைச்சு மற்றும் பள்ளி நிர்வாகம் இதனை மறு பரிசீலனை செய்து திடல் மீது கை வைப்பதை உடனடியாக நிறுத்த வரும் ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 2 ஆம் திகதி பெற்றோர்களும் அவ்வட்டார இந்திய மக்களும் ரவாங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் காலை 8.30 மணிக்கு ஒன்று கூடி தங்களது எதிர்ப்பை கல்வி அமைச்சுக்கும் பள்ளி நிர்வாகதிற்கும் தெரிவிக்கவுள்ளனர்.
செய்தி : வெற்றி விக்டர்
0 Comments