loader
பிரதமருக்கு வாய்ப்பு அளியுங்கள்; நெகிரியில் பக்காத்தானுக்கு ஆதரவு அளியுங்கள்-  – குணராஜ் ஜோர்ஜ்

பிரதமருக்கு வாய்ப்பு அளியுங்கள்; நெகிரியில் பக்காத்தானுக்கு ஆதரவு அளியுங்கள்- – குணராஜ் ஜோர்ஜ்

 

சிரம்பான்,ஜூலை 29 – 
தற்போதைய மத்திய அரசு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மட்டுமல்ல; பல கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி அரசாகும் என்பதால், எந்தவொரு குற்றச்சாட்டையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது மட்டும் சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் நிர்வாகத்தை முழுமையாக முன்னெடுத்து செல்ல பிரதமருக்கு போதுமான காலமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஆலயங்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எந்த இந்து ஆலயமும் இடிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், இடமாற்றம் செய்யப்பட்ட ஆலயங்களுக்கு புதிய நிலம் வழங்கப்பட்டதோடு, அவற்றின் பிரதமருக்கு முழுமையாக செயல்பட வாய்ப்பு வழங்க வேண்டும்; நெகிரியில் பக்காத்தானுக்கு ஆதரவு அளிக்குங்கள் – குணராஜ் ஜோர்ஜ்

செந்தோசா, ஜூலை 29 – தற்போதைய மத்திய அரசு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மட்டுமல்ல; பல கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி அரசாகும் என்பதால், எந்தவொரு குற்றச்சாட்டையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது மட்டும் சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் நிர்வாகத்தை முழுமையாக முன்னெடுத்து செல்ல பிரதமருக்கு போதுமான காலமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஆலயங்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எந்த இந்து ஆலயமும் இடிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், இடமாற்றம் செய்யப்பட்ட ஆலயங்களுக்கு புதிய நிலம் வழங்கப்பட்டதோடு, அவற்றின் வளர்ச்சிக்காக அரசாங்க மானியமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்திய சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் சரியான முறையில் எடுத்துச் சென்றால், அவற்றை பரிசீலித்து நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஹராப்பானுக்கு இந்திய வாக்காளர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தற்போதைய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல புதிய மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அவற்றில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் படகுத் துறையை அமைக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனில், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சியை அமைப்பது அவசியம் என்றும் அதற்காக நெகிரி மாநில இந்திய வாக்காளர்கள் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்றும் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார். வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்திய சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் சரியான முறையில் எடுத்துச் சென்றால், அவற்றை பரிசீலித்து நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இந்திய வாக்காளர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தற்போதைய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல புதிய மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அவற்றில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் படகுத் துறையை அமைக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனில், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சியை அமைப்பது அவசியம் என்றும் அதற்காக நெகிரி மாநில இந்திய வாக்காளர்கள் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்றும் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News