கோலாலம்பூர், ஜூலை 19-
மலேசிய இந்து சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில், தலைவர் தங்க கணேசன் தலைமையிலான "வெற்றி அணி" அனைத்து ஒன்பது இடங்களிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது.
சன்வே திருமுருகன் கோவில் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் 49-ஆவது ஆண்டு மாநாட்டை தொடர்ந்து, உச்சமன்றத்தின் ஒன்பது உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
தேர்தலில், தற்போதைய தலைவர் தங்க கணேசன் தலைமையிலான வெற்றி அணி மற்றும் டாக்டர் முரளி தலைமையிலான மறுமலர்ச்சி அணி நேருக்கு நேர் மோதின.
வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர், வெற்றி அணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களின் விவரம்:
பொன் சந்திரன் – 1,027 வாக்குகள்
சுகுமாரன் – 1,026 வாக்குகள்
முனைவர் லிங்கேஸ்வரன் – 1,026 வாக்குகள்
ஜி. முனிஸ்வரன் – 1,021 வாக்குகள்
உமாசுதன் – 1,009 வாக்குகள்
எம். ராதா – 1,001 வாக்குகள்
எம். குமார் – 985 வாக்குகள்
பரமசிவம் – 981 வாக்குகள்
விஜய பாஸ்கர் – 980 வாக்குகள்
இந்த வெற்றியின் மூலம், மலேசிய இந்து சங்கத்தின் நிர்வாகத்தில் தங்க கணேசன் தலைமையிலான அணிக்கு உறுப்பினர்களின் வலுவான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்கள் கருதுகின்றன.
0 Comments