கோலாலம்பூர், ஜூன் 12–
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி அண்மையில் பத்துமலை திருத்தளத்தில் நடைப்பெற்றது.
குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியர்களின் நலன் கருதி வம்சம் அமைப்பு இந்த யாகத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த யாகத்தில் தங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 54 தம்பதியர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.
கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாகத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை, டாக்டர் உமா மாரியப்பன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றனர். ஆகையால் காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவி குருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.
மலேசியாவில் முதல் முறையாக இந்த புத்திர காமஸ்தி யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த பெருமை வம்சம் அமைப்பையே சேறும்
0 Comments