loader
கல்லூரி நினைவுகளை மீட்டெடுத்த முன்னாள் மாணவர்கள்!  மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சியுடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு!

கல்லூரி நினைவுகளை மீட்டெடுத்த முன்னாள் மாணவர்கள்! மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சியுடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு!

பத்துகேவ்ஸ், செப் 3-
துவான்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (MPTB) சார்பில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி அன்று பத்து கேவ்ஸ், செங்ஹா மண்டபத்தில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களின் மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சி, வெற்றிகரமாக நிறைவடைந்தது என தலைவர் முனைவர் விக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி, கடந்த 1992 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் பயின்ற பயிற்சி ஆசிரியர்கள், தங்கள் கல்லூரிக் கால நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. பள்ளிப் பருவத்தைப் போல, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி நாட்களும் வாழ்வில் மறக்க முடியாத அத்தியாயம். கல்வி, விளையாட்டு, கலை எனப் பல அனுபவங்கள், நட்பின் ஆழத்தை உணர்த்திய நாட்கள். அந்த அரிய நினைவுகள் மீண்டும் உயிர் பெற்றது.

இந்தச் சந்திப்பில், ஆசிரியர்களுடன், அவர்களுக்குப் பாடம் கற்பித்த விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இது, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உறவைப் புதுப்பிக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. வாழ்வின் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றவர்கள், மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்று கூடி, தங்கள் நினைவுகளை மீட்டெடுத்த தருணம் பல கண்களைக் குளமாக்கியது என அவர் கூறினார்.

மேலும், தப்பா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இந்த நிகழ்விற்கு மேலும் பெருமை சேர்த்தார்.

இந்த மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்து அயராது உழைத்த ஆசிரியர் மற்றும் முனைவர் விக்டர் ஆசீர்வாதம் அவர்களின் ஏற்பாடுகள் மிகவும் பாராட்டிற்குரியது. அவரது செயற்குழுவினரின் அர்ப்பணிப்பு, நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவரது விடாமுயற்சி இல்லையெனில், இந்த அழகான ஒன்றுகூடல் சாத்தியமாகியிருக்காது.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பலரின் வாழ்வில் ஒரு புதிய பாதையை வகுத்தது. அந்தப் பாதையில் பயணித்தவர்கள், மீண்டும் சந்தித்து தங்கள் பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது, ஒரு காலப் பயணத்தைப் போன்றது. இந்த நிகழ்ச்சி, முன்னாள் மாணவர்களின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அத்தியாயமாக அமைந்தது. மீண்டும் ஒருமுறை அனைவரையும் ஒன்றிணைத்து, இனிமையான நினைவுகளை மீட்டெடுக்க உதவிய அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்
சமர்பணம் என தலைவர் முனைவர் விக்டர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News