கோலாலம்பூர், செப்.2-
பெஸ்தாரி ஜெயா, லாடாங் புக்கிட் பாடோங்கிலுள்ள ஆலயம் ஒன்றில் திருவிழாவில் வானை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட ஆசாமியை போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் தொடர்பில் நேற்று மாலை 3.50 மணிக்கு கிடைத்த புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசாமியை இரவு 8 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்ததாக கோல சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் அஸாஹருடின் தஜுடின் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர் மேல் விசாரணைக்காக இம்மாதம் 4ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
0 Comments