loader
கோலாசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய விவகாரம்: வாட்ஸ் ஆப்பில் கடிதம் அனுப்புவர்கள் செயலாளரிடம் கடிதத்தை கொடுத்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும்!

கோலாசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய விவகாரம்: வாட்ஸ் ஆப்பில் கடிதம் அனுப்புவர்கள் செயலாளரிடம் கடிதத்தை கொடுத்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும்!

கோல சிலாங்கூர், செப்.2-
சிலாங்கூர் மாநிலத்தில் பத்து மலை முருகன் ஆலயத்தை அடுத்து பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்கும் கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியம் ஆலயம் தொடர்பில் சில நாட்களாக பல சர்ச்சைகள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வரப்பட்டு வந்தது.

ஆலய உறுப்பியத்தில் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆலய செயலாளரை கண்டு பேசி அல்லது கடிதம் அனுப்பி பிரச்சினைக்கு தீர்வுக் கண்டிருக்கலாம். ஆனால் அதனை செய்யாமல் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது ஆலயத்திற்குதான் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த பிரச்சினை தீர்ந்தாலும் ஆலயத்திற்கு ஏற்பட்ட கலங்கத்தை மாற்ற முடியுமா என ஆலயத் தலைவர் கண்ணதாசன் பரசிவன் கேள்வி எழுப்பினார்.

ஆலயத்தின் உறுப்பிய சந்தா செலுத்துவதற்கு இறுதி நாள் ஜனவரி 31 ஆகும். ஆனால் இதுநாள் வரை இன்னும் சிலரை அந்த தொகையை செலுத்தாமல் உள்ளனர். ஆலய உறுப்பிய சந்தாவை செலுத்தாதவர்களை அரவனைத்து செல்ல நாங்கள் தயாராக உள்ளோம். ஆகையால் இந்த பிரச்சினையை களைய அவர்கள் செயலாளருடன் இணைந்து பேசி கட்டணத்தை செலுத்தும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

ஆலயம் என்றால் அதன் நிர்வாகத்தில் சில தவறுகள் இருக்கதான் செய்யும். ஆகையால் வருங்கால சவால்களை எதிர்கொள்ள ஆலயம் முறைப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

மேலும் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் கட்டப்படவுள்ள மின்சுடலை கட்டுமானத்திற்கு அரசு மானியம் வழங்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஆலயத்தின் 60ஆவது பொதுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை ஆலய மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகையளித்திருந்த உறுப்பினர்கள் அவர்களின் கருத்துகளையும் குறைகளையும் முன் வைத்தனர். உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆலய தலைவர் முறையான பதிலை அளித்தார்.

0 Comments

leave a reply

Recent News