கோலாலம்பூர், செப். 1-
நெகிரி செம்பிலான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி மாணவர் வசந்த் அபிநந்தன் (வயது 8) அனைத்துலக யோகா போட்டியில் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அண்மையில் கோலாலம்பூர் பண்டார் துன் ரசாக் அனைத்துலக இளைஞர் மையத்தில் நடைபெற்ற அனைத்துலக யோகா போட்டியில் மலேசியா, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் பொதுவான ஆசனம் பிரிவில் மூன்றாம் இடத்தையும், சாம்பியன்ஷிப் பிரிவில் மூன்றாம் இடத்தையும் வசந்த் அபிநந்தன் வென்றார்.
மேலும் நீண்டகால ஆசனம் பிரிவில் ஆசியா உலகச் சாதனை ஏற்படுத்தி சிறப்பிக்கத்தக்க பெருமையையும் அவர் பெற்றார்.
0 Comments