கோலாலம்பூர், ஆக.28-
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (UTM) கேடட் சம்சூல் ஹாரிஸ் ஷம்சுதீனின் உடல் வரும் வெள்ளிக்கிழமை காலை தோண்டி எடுக்கப்படும் என்று குடும்ப வழக்கறிஞர் நரான் சிங் தெரிவித்தார்.
செமெனியில் உள்ள கம்போங் ரிஞ்சிங் உலு இஸ்லாமிய கல்லறையில் அந்த இளைஞனின் தாயார் உம்மு ஹம்மான், தடயவியல் நிபுணர் டாக்டர் பூபிந்தர் சிங், அதிகாரிகள் மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறையினர் முன்னிலையில் இது நடைபெறும் என்று அவர் கூறினார்.
பின்னர் உடல் உடனடியாக இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை (HKL) தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்படும்.
சம்சூல் ஹாரிஸின் மரணத்தை விசாரிக்க ஒரு சிறப்பு குழுவை அமைப்பதில் விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையை, குறிப்பாக அதன் இயக்குநர் எம். குமாரை நரான் சிங் பாராட்டினார்.
உமு ஹம்மான் பீயின் விண்ணப்பத்தை நீதித்துறை ஆணையர் பூபிந்தர் சிங் குர்சஹான் சிங் நேற்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அவரின் சடலம் நாளை 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.
தோண்டி எடுக்கும் பணியை மேற்பார்வையிடவும், தோண்டி எடுக்கும் நாளில் இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தவும் காவல் துறைத் தலைவர் அல்லது அவரது அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தோண்டி எடுக்கும் பணியை மேற்பார்வையிடவும், தடயவியல் நோயியல் நிபுணரின் அறிக்கையை நியாயமான காலத்திற்குள் சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 29ஆம் தேதி சம்சூல் ஹாரிஸ் மரணமுற்றதை தொடர்ந்து அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி இரண்டாவது பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரின் தாயார் இம்மாதம் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
0 Comments