ஷா ஆலம், ஆக.25-
ஷா ஆலம் செக்ஷன் 24இல் உள்ள கார் பட்டறையில் நேற்று ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி சேதமடைந்தன.
இந்த தீச்சம்பவத்தில் அந்த பட்டறையில் வேலை செய்து வந்த 30 வயதுடைய உள்ளூர்வாசி தீக்காயங்களுக்குள்ளானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் அமலாக்கப் பிரிவின் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து இரவு 11.31 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தவுடன் ஷா ஆலம் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். தீச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பட்டறை 90 விழுக்காடு சேதமடைந்தது. மேலும் அந்த பட்டறையிலிருந்து 37 கார்களும் 7 மோட்டார் சைக்கிள்களும் தீயில் சேதமடைந்ததாக அவர் சொன்னார்.
நள்ளிரவு 12.26 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் அதிகாலை 2.31 தீயணைப்பு பணிகள் முடிவடைந்ததாக அவர் சொன்னார்.
0 Comments