சிரம்பான் ஆகஸ்ட்-17
ம.இ.காவின் நெகரி செம்பிலான் மாநிலத்தின் 79 பேராளர் மாநாட்டை ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் இன்று தொடக்கி வைத்தார்.
சிறப்புரை ஆற்றிய அவர் பேசுகையில்
இந்த ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கும் போது ம.இ.காவின் தலைவர் டான் ஸ்ரீ.விக்னேஸ்வரன் ம.இ.காவுக்கு எத்தனை பதவி வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை கோரவில்லை.
ஆனால் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கட்சி என்ற முறையில் ம.இ.காவிற்கு அவர்கள் அமைச்சரவை பதவி கொடுத்திருக்க வேண்டும். அந்த கடமை அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்றார்.
அந்த வகையில் ம.இ.கா பொருமை காத்து இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்தது. அதன் பின் மாநில தேர்தல் நடந்த போது கண் துடைப்புக்கு ம.இ.கா எத்தனை இடத்தில் போட்டியிட விரும்புவதாக கடமைக்கு ஒரு பெயர் பட்டியலை கேட்டு ,ரமணா படத்தில் வருவது போல் பரபரப்பை காட்டி இறுதியாக அவர்களே ஒரு முடிவை எடுத்துக்கொண்டனர். பிறகு இந்த முடிவுக்கு வருந்துகிறோம் என சொல்லி ம.இ.கா வெற்றிப்பெற்ற ஒரு சட்ட மன்றத்தில் மட்டுமே போட்டியிட சொன்னார்கள் அதுவும் இறுதி நேரத்தில்.
அப்போது ம.இ.கா அந்த தேர்தலை புறக்கணித்தது , உடனே ம.இ.கா அலுவலகத்தை தேடி வந்தார் பிரதமர் , இந்த தேர்தலில் உங்கள் ஒத்துழைப்பு தேவை எனக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் ம.இ.கா உறுப்பினர்கள் மத்தியில் சொன்னார்.
தேர்தல் முடிந்த பின் அவரும் அமைதியானார், ஒரு அமைச்சரவை மாற்றம் அதிலிலும் ம.இ.கா அங்கம் வகிக்க வில்லை.
அதன் பின் ம.இ.காவின் கட்டிட அடிகள் நாட்டு விழாவிற்கு தேசிய முன்னணியின் தலைவரும் துணை பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஷாஹிட் ஹமிடி வருகை தந்தார். அப்போதும் இந்தியர்கள் விவகாரங்களை பேச அமைச்சரவையில் இந்திய பிரதிநிதி இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
அவரும் சொன்னார் கவலை வேண்டாம் எனக்கு தெரியும் என்ன செய்யனும் என்று. அப்போது இவர்கள் இருவரும் " செய்யனும்" என்று சொன்ன வார்த்தைக்கு இப்போது தான் அர்த்தமே புரிந்தது.
நல்லா செய்தார்கள் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.
ம.இ.கா அதன் அரசியல் எதிர்காலத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவேண்டிய கட்டாயத்தை இவர்கள் உருவாக்கி விட்டனர்.
விரைவில் ம.இ.கா அதன் அடுத்த அரசியல் பயணத்திற்கான முடிவை எடுக்கும் என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
செய்தி :வெற்றி விக்டர் / காளிதாசன் இளங்கோவன்
0 Comments