கோலாலம்பூர், ஆக. 11-
பகிடிவதையால் நாட்டில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய பெர்சத்து ஒருங்கிணைப்பு நிர்வாக குழுவின்
செலாயாங் தொகுதி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ரீஜன் குமார் ரத்ணம் வலியுறுத்தினார்.
அண்மையில் இணையத் துன்புறுத்தலின் விளைவாக இரண்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தவனேஷ்வரி மற்றும் ஜாரா கைரினா மகாதீர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய சம்பவங்கள் இன, மத பேதமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது என்பதால் அரசாங்கம் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
அத்துடன், சமூகத்தில் ஏற்படும் பகிடிவதை மற்றும் துன்புறுத்தலை ஒழிக்க சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தற்பொழுது பகிடிவதை அதிகமாக ஏற்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் சமூக ஊடகங்களின் வழியாகவும் நிறைய பகடிவதைகள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு முன்னதாக இணைய பகடிவதையாளும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே நாளுக்கு நாள் இதன் தாக்கம் நமது சமுதாயத்தை பெரிதளவில் பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments