loader
இந்திய சமுதாயத்திற்கு அதிக சேவை புரிந்ததது மஇகாவா? ஜசெகவா?  துளசியை பொது விவாதத்திற்கு அழைக்கிறார் தியாகேஷ்!

இந்திய சமுதாயத்திற்கு அதிக சேவை புரிந்ததது மஇகாவா? ஜசெகவா? துளசியை பொது விவாதத்திற்கு அழைக்கிறார் தியாகேஷ்!

மஇகா மற்றும் ஜசெக இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பேராக் மஇகா இளைஞர் அணி இப்போது ஒரு வெளிப்படையான தீர்வை வழங்க பொது விவாதத்திற்கு தயாராகியுள்ளது.

பேராக் மஇகா இளைஞர் அணித் தலைவர் தியாகேஷ் கணேசன், இந்திய சமூகத்தின் பிரச்சினை குறித்து விவாதிக்க புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் எம். துளசியை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதில் மஇகா மற்றும் ஜசெகவின் செயல்திறன் குறித்து விவாதம் புரிய தான் பரிந்துரைத்ததாக தியாகேஷ் கூறினார்.

மஇகாவின் இடங்கள் சட்டமன்றத்திலோ அல்லது மக்களவையிலோ குறைவாக இருந்தாலும், கட்சி இன்னும் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் திறனை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

மஇகா இந்திய சமூகத்தை ஏமாற்றுவதாக ஜசெக நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.

ஜசெக இப்போது 40 நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ளது மற்றும் பக்காத்தா ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்தில் மிகப்பெரிய கட்சியாக இருக்கும்போது, ஜசெக என்ன சாதித்துள்ளது என்பதை விளக்குமாறு துளசிக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

எனவே, துளசியின் வெளிப்படையான விளக்கத்தை நான் கேட்க விரும்புகிறேன்.
இந்து கோயில்களின் இடமாற்றம் மற்றும் இடிப்பு, இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இடங்கள் பற்றியும் பேசுவோம், மேலும் மலேசிய இந்திய உருமாற்ற பிரிவு (மித்ரா) தொடர்பான பிரச்சினையை மறந்துவிடக் கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

தன் தொகுதி மக்களுக்கான பங்களிப்பை கருத்தில் கொண்டு துளசி இந்த விவாதத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த விவாதத்தை சமூக ஊடகத்தில் நேரடியாக ஒளிப்பரப்ப படுவதையும் தாம் வரவேற்பதாக தியாகேஷ் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News