கோலாலம்பூர், ஜூலை 30-
நாடறிந்த கவிஞர் திரு. தமிழ் செல்வம் காத்தமுத்து அவர்கள் எழுதிய 'புதிய ஓலைச்சுவடி' எனும் கவிதைத் தொகுப்பு நூல், எதிர்வரும் 9/8/2025, சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு வெளியீடு காண உள்ளது.
இந்த நிகழ்ச்சி ம.இ.கா. தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர், சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இந்நிகழ்ச்சியைத் தலைமையேற்று நூலை வெளியிடுகிறார்.
இவ்வேளையில் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள மற்றும் பொது மக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேல் விவரங்களுக்கு 016-444 2029 என்ற எண்ணில் திரு. ம. முனியாண்டி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
0 Comments