பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30-
காஜாங்கிலுள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியரை முகத்தில் குத்தியதுடன் மிரட்டிய குற்றத்திற்காக 14 வயதுடைய மாணவன் ஒருவனை போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் மாணவன் ஒருவனால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக 29 வயதுடைய ஆசிரியர் செய்த புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவன் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
உடற்கல்வி பாடத்தின்போது சம்பந்தப்பட்ட மாணவன் கலந்து கொள்ளாததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் அவரை கண்டித்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது அம்மாணவன் ஆசிரியரின் சட்டையை பிடித்து மிரட்டியதுடன் அவரை முகத்தில் குத்திய சம்பவங்களை அங்குள்ள மற்றொரு ஆசிரியர் தன் கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட மாணவன் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். இந்த விவகாரம் செக்ஷன் 323 மற்றும் 506 குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக நஸ்ரோன் தெரிவித்தார்.
0 Comments