loader
பி40 மக்களுக்கு உதவும் திட்டத்தை முன்னெடுங்கள்!  அனைவருக்கும் வெ.100 கொடுப்பதின் உள் அரத்தம்தான் என்ன?

பி40 மக்களுக்கு உதவும் திட்டத்தை முன்னெடுங்கள்! அனைவருக்கும் வெ.100 கொடுப்பதின் உள் அரத்தம்தான் என்ன?

பூச்சோங், ஜூலை 26-
மக்களுக்கு உதவும் திட்டத்தை அரசு முன்னெடுக்கும் படசத்தில் உதவி தேவைப்படும் தரப்பினருக்கு முக்கியதுவம் அளிக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் நாட்டிலுள்ள பி40 பிரிவினர்களுக்கான உதவித் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்.

அதனைவிடுத்து, அனைவருக்கும் ரஹ்மா திட்டத்தின் வழி வெ.100 வழங்குவதில் எந்த பயனும் இல்லை என டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

எனக்கும் என் மனைவிக்கும் அரசாங்கம் வெ.100 கொடுப்பதினால் என்னதான் பயன் என அவர் வினவினார்.

முந்தைய ஆட்சியில் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு அன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பிரிம் உதவித் தொகையை வழங்கினார். அப்பொழுது அது தேர்தலுக்கான லஞ்சம் என எதிர்க்கட்சியினர் குறைக்கூறினர். ஆனால் இன்றைய ஆட்சி அவர்கள் கையில். அதுவும் அனைத்து மக்களுக்கும் வெ.100ஐ வழங்கவுள்ளதாக அறிவிப்பு செய்வதன் உள் அர்த்தம்தான் என்ன? இதுவும் லஞ்சம்தானே என டத்தோ டி.மோகன் கூறினார்.

பொருளாதார நிலையில் மக்களின் நிலையை உயர்த்த அரசு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்திய சமுதாயத்திற்கு உதவும் பொருட்டு மித்ரா தொகையை வெ.200 மில்லியனாக உயர்த்தலாம். ஆகையால் புதிய உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அது மக்களுக்கு தேவையானதா என்பதை அரசு அறிந்திருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

இதற்கிடையில் அன்வார் விலக வேண்டும் என்ற பேரணி தலைநகரில் நடப்பதை பற்றி அவரிடம் கேட்டபோது, அது அன்வாரின் கர்மா என அவர் கூறினார்.

நாட்டில் பல பேரணிகள் அவரின் தலைமையில்தான் நடந்தது. பேரணிகள் நடத்துவதை ஊக்குவித்தவரே அவர்தான். தற்போது அந்த கர்மா அவரை தாக்குகிறது. ஆனால் இவ்வளவு சீக்கிரம் தாக்கும் என தான் நினைத்து பார்க்கவில்லை என்றார் டத்தோ டி.மோகன்.

பூச்சோங் பண்டார் புத்ரியில் இன்று ஸ்ரீ பிஸியோ சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

0 Comments

leave a reply

Recent News