கோலாலம்பூர், ஜூலை 25-
ரஷ்யாவின் அமுர் பகுதியில் நேற்று நடந்த AN-24 விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அமுர் பகுதியில் நடந்த விமான விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு தான்ன் மிகவும் வருத்தமடைந்ததாகவும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் அனுதாபங்களை தெரிவிப்பதுடன் பிராத்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.
விமானம் தரையிறங்கும் கட்டத்தில் தீப்பிடித்து எரிந்ததாகவும், விபத்து நடந்த இடத்தில் நடத்தப்பட்ட வான்வழி ஆய்வில் யாரும் உயிர் பிழைத்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு பணியாளர்கள் உட்பட 46 பயணிகள் இருந்தனர்.
0 Comments