loader
கிரீன் பாக்கெட்டின் நிர்வாக இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ வீரா ஷாகுல் தாவூத் நியமிக்கப்பட்டார்

கிரீன் பாக்கெட்டின் நிர்வாக இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ வீரா ஷாகுல் தாவூத் நியமிக்கப்பட்டார்

கோலாலம்பூர், ஜூலை 21-
கிரீன் பாக்கெட்டின் நிர்வாக இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ வீரா ஷாகுல் தாவூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் நியமனம் இன்று முதல் அமலுக்கு வருவதாக  தொழில்நுட்ப தீர்வு வழங்குநர் நிறுவனமான கிரீன் பாக்கெட் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

டத்தோ வீரா ஷாகுல் ஷாகுல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு துறைகளில் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் மாற்றத்தை உருவாக்குவதற்கும் வலுவான பொது தனியார் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும் அவரது திறனுக்காக பரவலாக மதிக்கப்பட்டதாக கிரீன் பாக்கெட் தெரிவித்துள்ளது.

எனது  இந்தப் பங்கு ஒரு நிறுவனத்தை வழிநடத்துவது மட்டுமல்ல, தொழில்நுட்பத்தை நிஜ உலக முன்னேற்றத்துடன் இணைப்பதை கொண்டதாகும்.

மேலும் மலேசியாவிற்கு அப்பால் கிரீன் பாக்கெட் நிறுவனத்தின் தாக்கத்தை அதிகரிப்பதை கொண்டதாகும் என்று டத்தோ  வீரா ஷாகுல் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

கிரீன் பாக்கெட் வட்டார வளர்ச்சி, உள்ளடக்கிய கண்டுபிடிப்புகளில் தனது கவனத்தை கூர்மைப்படுத்தும் நிலையில்,

எனது நியமனம் வணிக வெற்றியைத் தாண்டிச் சென்று ஆசியான், அதற்கு அப்பால் நேர்மறையான இலாக்கவியல் மாற்றத்திற்கான ஒரு ஊக்கியாக மாறுவதற்கான நிறுவனத்தின் நோக்கத்தைக் குறிக்கிறது என்று அவத் கூறினார்.

முன்னதாக டத்தோ வீரா ஷாகுல் சமீபத்தில் எச்ஆர்டி கோர்ப்பின் தலைமை நிர்வாக இயக்குநாக பதவி வகித்தார்.

அவர் தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை முடித்த பின்னர் ஏப்ரல் மாதம் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

எச்ஆர்டி கோர்ப் வாயிலாக நாட்டின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் மேம்பாட்டு திட்டங்களை வெற்றிகரமாக நடத்தினார்.

இது  மில்லியன் கணக்கான மலேசியர்களையும் தொழில், கல்வி,  அனைத்துலக அமைப்புகளைச் சேர்ந்த ஆதரவாளர்களையும் உள்ளடக்கியது.

தேசிய எல்லைகளுக்கு அப்பால், துறைகள், புவியியல் பகுதிகளைத் தாண்டிய மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவதில் டத்தோ வீரா ஷாகுல் தனது திறமைக்காக அங்கீகரிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News