loader
மலேசிய இந்து சங்க தேர்தலில்  தங்க கணேசன் அணி மகாத்தான வெற்றி! மீண்டும் தலைவரானார் தங்க கணேசன்!

மலேசிய இந்து சங்க தேர்தலில் தங்க கணேசன் அணி மகாத்தான வெற்றி! மீண்டும் தலைவரானார் தங்க கணேசன்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 20-
நாடே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த மலேசிய இந்து சங்கத் தேர்தலில் நடப்பு தலைவர் தங்க கணேசன் வெற்றி பெற்று மீண்டும் தலைவரானார்.

இன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மலேசிய இந்து சங்கத்தின் 48ஆவது பேராளர் மாநாடு மற்றும் தேர்தலும் நடைபெற்றது.

மொத்தம் 10 பேராளர்கள் பதவிக்கு இரு அணி சார்பில் 20 பேர் போட்டியிட்டனர்.
வெற்றி அணிக்கு தங்க கணேசன் தலைமை ஏற்ற வேளையில் மாறுவோம் மாற்றுவோம் அணிக்கு கணேஷ் பாபு தலைமை ஏற்றார்.

கடந்த இரண்டு வாரங்களாக பிரச்சாரம் அனல் பறந்தது.
இந்நிலையில் இன்று காலையில் 2,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் திரண்டு வந்து வாக்களித்தால் யார் வெற்றி பெறுவார்கள் என ஆவல் எதிரொலித்தது.

ஆலயங்கள் சார்பில்  வாக்களிக்க தனி பிரிவு , பேராளர்கள் சார்பில் வாக்களிக்க தனி பிரிவு மற்றும் ஆயுள் கால உறுப்பினர்கள் வாக்களிக்க தனி பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாலை நான்கு மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நடப்பு தலைவர் தங்க கணேசன் 1,102 வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றார்.

அவரின் அணியைச் சேர்ந்த கோபி 1,091 வாக்குகள்,சுஜித்திரா 1,064 வாக்குகள், ஹரிதாசன் 1,064 வாக்குகள், சதீஷ் 1,041 வாக்குகள், ஏரா பெருமாள் 1,034 வாக்குகள் பெற்றனர்.

கணேஷ் பாபு அணியைச் சேர்ந்த முனைவர் டாக்டர் முரளி 1,031 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதே சமயம் தங்க கணேசன் அணி சார்பில் தினகரன் 1,034 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கணேஷ் பாபு 1,028 வாக்குகள் பெற்று 9 இடத்திற்கு தேர்வு பெற்றார்.

தங்க கணேசன் அணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷான் 1,023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

இம்முறை வெற்றி கூட்டணி அணி சார்பில் மொத்தம் 8 பேர் வெற்றி பெற்ற வேளையில் மாறுவோம் மாற்றுவோம் அணி சார்பில் கணேஷ் பாபு மற்றும் டாக்டர் முரளிதரன் வெற்றி பெற்றனர்.

மொத்தம் 10 இடங்களில் 8 இடங்களில் தங்க கணேசன் அணியினர் வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது.

கடுமையான போட்டிக்கிடையே தங்க கணேசன் அணி வெற்றி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே தங்க கணேசன் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாலகிருஷ்ணன் புதிய துணை தலைவராகவும் உதவித் தலைவர்களாக டத்தோ மோகன் ஷான், விநாயக மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மலேசிய இந்து சங்கத்தின் புதிய செயலாளராக காண மூர்த்தி மற்றும் பொருளாளராக ஏரா பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News