கோலாலம்பூர், ஜூலை 19-
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் முன்னணி மதிப்புமிக்க உலோக வர்த்தக நிறுவனமும் Public Gold இணைந்து கடந்த ஒரு ஆண்டில் சாதனை புரிந்த 3,000-க்கும் மேற்பட்ட Public Gold வர்த்தகர்களை கௌரவிக்கும் விழாவை மிகச் சிறப்பாக நடத்தியது.
இந்த பெருவிழா, மலேசியா சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையமான MITEC-இல் நடைபெற்றது. இதில் Public Gold குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக தலைவரான டத்தோ வீரா லூவிஸ் ஏங், மற்றும் Aurora Italia International Berhad-இன் நிர்வாக இயக்குநர் டத்தின் வீரா யுவோன் லிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
2008 ஆம் ஆண்டு பினாங்கு புக்கிட் ஜம்பூலில் ஒரு சிறிய கடையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த Public Gold, நான்கு ஆண்டுகளில் பினாங்கின் தொழிற்சேமிப்பு பகுதியில் உள்ள விஸ்மா Public Gold-இற்கு வளம் பெற்றது.
அதனை தொடர்ந்து இன்று மெனாரா துன் ராசாக் எக்சேன்ஸ் (TRX) எனும் கட்டடத்திற்கு அறுகாமையில் Public Gold தலைமை அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் சுமார் 19 கிளைகள், இண்டோனேசியாவில் 6, சிங்கப்பூரில் 1 மற்றும் சமீபத்தில் துபாயிலும் ஒரு கிளையையும் அமைத்துள்ளது Public Gold.
கடந்த வருமான கணக்கின் படி Public Gold RM20.58 பில்லியன் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இதுவரையில் மொத்தம் இரண்டுமில்லியன் நபர்கள் பதிவு செய்த வாடிக்கையாளர்களாக உள்ளனர். இது, நிறுவனத்தின் வலிமை மற்றும் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது.
இந்த வளர்ச்சியின் பின்னணியில், PGBOs என்ற வியாபார முன்னோடிகள் மற்றும் நம்பிக்கையான வாடிக்கையாளர்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அவர்களின் உழைப்பு மற்றும் தாராள எண்ணத்துக்கு நன்றியறிதலாக, வருடாந்திர விருது வழங்கும் நிகழ்வு இவ்வாண்டு மிக சிறப்பாக நடப்பட்டது.
நிகழ்வில் மொத்தம் 23 க்கும் மேற்பட்ட விருது பிரிவுகள் உட்பட, வெ15,814,963.63 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் 780 பேர் விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டதோடு ,சிறந்த விருது பெற்றவர்களில் Triple Diamond பட்டம் பெற்ற ஜூல்கிப்லி பின் ஷாப்பி மற்றும்
நஜ்தா பிந்தி முகமது ஹுசைன் அவர்களுக்கு வெ.877,294.84 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இவர்களின் வியாபார பெருமையை மலேசியாவிலும், பிற நாடுகளிலும் பரப்பியமைக்கு இது பாராட்டாக அமைந்தது.
0 Comments