கோலாலம்பூர்,ஜூன் 30-
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 38-ஆவது தமிழ் விழாவில் பங்கேற்கும் பொருட்டு, மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தலைமையில் எண்மர் அடங்கிய குழு இன்று அமெரிக்கா நோக்கி புறப்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவின் முதல் நாளில், உலகத் தமிழர்கள் ஒன்றும் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை முன்னிறுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.
இந்த நிகழ்வில், உலகத் தமிழர்களின் ஆளுமையான முக்கியப் பிரமுகராக, டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரையாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அவர் நேற்று நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கலந்துகொண்டார். இன்றைய தமிழ் விழாவிலும் பங்கேற்கும் வகையில் அமெரிக்கப் பயணமாகியுள்ள அவர், உலகளவில் தமிழ் மொழியையும் தமிழர் கலாச்சாரத்தையும் பறைசாற்றி வருவது பெருமைக்குரியது.
0 Comments