loader
டான்ஸ்ரீ தம்பிராஜாவின் கொள்கைகளையும் கண்ணியத்தையும் எஸ்எம்சி தொடரும்! -சுரேந்திரன்

டான்ஸ்ரீ தம்பிராஜாவின் கொள்கைகளையும் கண்ணியத்தையும் எஸ்எம்சி தொடரும்! -சுரேந்திரன்

கோலாலம்பூர், ஜூன் 29-
இந்திய மாணவர்கள் கல்வியில் வெற்றிப் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் கடந்த 43 ஆண்டுகளாக எஸ்எம்சி கல்வி நிலையத்தை டான்ஸ்ரீ தம்பிராஜா வழிநடத்தி வந்துள்ளார்.

கல்விக்காக அவர் செய்த புரட்சி இன்று பல பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

அவரின் மறைவு நமக்கு வருத்தத்தை அளித்தாளும் அவர் சொல்லிச் சென்ற வார்த்தைகள் நமக்கு தொடர்ந்து ஊக்குவிக்கும் என சுரேந்திரன் கூறினார்.

அவரின் பாதையில் செல்லும் அனைத்து மாணவர்களின் வெற்றிதான் அவரின் ஆத்மாவை சாந்தியடைய வைக்கும் எனவும் சுரேந்திரன் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா தமது 83 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் மறைவை முன்னிட்டு இன்று பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப் பள்ளியில் நினைவஞ்சலி பிரார்த்தனை நடைபெற்றது.

டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜாவின் புதல்வி சுமித்ரா இதில் கலந்து கொண்டார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் , மாணவர்கள்,  பெற்றோர்கள் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜாவுக்கு கண்ணீரோடு அஞ்சல் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News