தெலுக்கிந்தான், ஜூன் 25-
ஹிலிர் பேராக் சமூக நலன் இயக்கம் மற்றும் மலேசிய இலக்கவியல் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பேராக் மாநிலக கலை கலாச்சார இலாகாவின் ஆதரவோடு ஒரு சிறப்பான கலை கலாச்சார இரவு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 29 ஆம் தேதி 2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தெலுக்கிந்தான் ஜலான் மகாராஜா லேலாவில் உள்ள A2Z இவென்ட் ஸ்பேஸ், அரங்கத்தில் நடைபெறவுள்ளது என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான சிவபாலன் தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, வைசாகி மற்றும் விசு
புத்தாண்டுகளின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க இந்திய பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், அதிர்ஷ்டச்சீட்டு நிகழ்வு (lucky draw) மற்றும் பாரம்பரிய உணவுவிருந்து போன்ற பல்வேறு கலை, கலாச்சார அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளன.
மேலும் இந்நிகழ்ச்சி குறித்த விவரங்கள் பெறுவதற்கு 0165474402 / 011-36270047/ 012-5565553 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
0 Comments