loader
பிரச்சினைகளை பற்றி பேசுவதை விடுத்து சாதனையை தொடர்வோம்! -டாக்டர் சத்திய பிரகாஷ்

பிரச்சினைகளை பற்றி பேசுவதை விடுத்து சாதனையை தொடர்வோம்! -டாக்டர் சத்திய பிரகாஷ்


செரண்டா, ஜூன் 22-
நம் இனத்தில் குறைகளை பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தால் நம்மால் சாதனை படைக்க முடியாது. குறை பேசுவதை தவிர்த்து விட்டு சாதனை படைப்பதற்கு நாம் முக்கியதுவம் வழங்க வேண்டுமென உலு சிலாங்கூர் பிகேஆர் தொகுதித் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் வலியுறுத்தினார்.

நாம் சாதனை படைக்க நம் இனத்தில் ஒற்றுமை மிகவும் அவசியமாகும். ஒற்றுமையாக செயல்பட்டால் நம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சொன்னார்.

இன்று மலேசிய இந்து சங்கம் புக்கிட் சொந்தோசா வட்டார பேரவையின் ஏற்பாட்டில் செராண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 47ஆவது திருமுறை ஓதும் விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

மாணவர்கள் மத்தியில் முன்னேற்றத்தையும் சமய கல்வியையும் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. சமய கல்வியை கற்ற மாணவர்கள் ஒருபோதும் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள். ஆகையால் சிறு வயதிலேயே மாணவர்களை நாம் சமய கல்வி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும்.

இந்திய மாணவர்கள் மத்தியில் சமயம், பண்பாடு, இனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பற்றி தெரிவிக்க வேண்டுமென அவர் சொன்னார்.

இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமுறை ஓதும் போட்டி, தேவாரம், வர்ணம் தீட்டும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

leave a reply

Recent News