loader
விலாயா மாநில மஇகா ஏற்பாட்டில் டிக் டாக் வழி வியாபாரம்: வியாபார நுணுக்கத்தை கற்றுத் தர அடுத்த பயிற்சிகள் தொடரும்! -டத்தோ ராஜா சைமன்

விலாயா மாநில மஇகா ஏற்பாட்டில் டிக் டாக் வழி வியாபாரம்: வியாபார நுணுக்கத்தை கற்றுத் தர அடுத்த பயிற்சிகள் தொடரும்! -டத்தோ ராஜா சைமன்

 

கோலாலம்பூர், ஜூன் 22-
விலாயா மாநில மஇகா ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக டிக் டாக் வழி வியாபாரம் பயிற்சி இன்று நடத்தப்படுகிறது. இணையம் வழி மக்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளவும் அதன் நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் இந்த பயிற்சி அடுத்தக்கட்டமாக நடத்தப்படும் என விலாயா மாநில மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் கூறினார்.

இன்றைய நிலையில் டிக் டாக் வலைத்தளத்தில் வியாபார வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதேபோல் அந்த வியாபார வாய்ப்புகளின் வழி அதிகமான வருமானமும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பினை நம் சமுயாத்தினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் சொன்னார்.

இன்று நடைப்பெற்ற பயிற்ச்சி பட்டரையில் 140 பேர் கலந்து கொண்டதாக அவர் சொன்னார்.

டிக் டாக்கில் எபிலேட்டார் ஆகுவது பற்றிய அடிப்படை பயிற்சியும் டிக் டாக்கில் எப்படி பொருட்களை தேர்வு செய்து அதனை விற்பனை செய்வது என்பதும் சொல்லித் தரப்பட்டது. இந்த பயிற்சியை பயிற்றுநர் காயத்திரி கிருஷ்ணன் வழிநடத்தினார்.

இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறுகையில், தொழில்நுட்ப மாற்றத்தை நோக்கி உலகம் பயணிக்கும் நேரத்தில் நாமும் அதற்காக நம்மை தாயார் நிலைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஆகையால் இதுபோன்ற இணையம் வழியான வியாபார வாய்ப்புகளில் நம்மவர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது அவசியம் என்றார்.

மேலும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தங்களின் பேச்சு ஆற்றல், வியாபார நுணுக்கம் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டுமென அவர் சொன்னார்.

0 Comments

leave a reply

Recent News