கோலாலம்பூர், ஜூன் 22-
சமூக வலைத்தளத்தில் பொருட்களை விற்பனை செய்து லாபத்தை பெறுபவர்கள் இனத்தை இழிவுப்படுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டுமென இந்து பணிக்குழுவின் தலைவர் புவனேஸ்வரன் வலியுறுத்தினார்.
ஒரு சில இந்து கடவுளின் ஆசையுடன் நான்கு எண் குழுக்கில் வெற்றிப் பெற முடியும் என்ற ஆசை வார்த்தை, வாழ்க்கையில் முன்னேற மை விற்பனை செய்வது போன்ற மூட நம்பிக்கையை முன்னிறுத்தி பொருட்களை விற்பனை செய்வது நமது இனத்தைதான் இழிவுப்படுத்துகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென புவனேஸ்வரன் தெரிவித்தார்.
சமூக வலைத்தளத்தில் நமது கலை, கலாச்சாரம், சமயம் போன்ற நல்ல விஷயங்கள் உள்ளது. இதை பலர் முன்னெடுத்து வருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரு சிலர் தங்களின் சொந்த லாபத்திற்காக பணத்தை ஈட்டுவதற்காக நம் இனத்தின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துகின்றனர். அந்த தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சொன்னார்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பலருக்கு வெறுப்பு இருக்கும். ஆனால் அதனை எதிர்த்து நாம் செய்யும் நடவடிக்கைதான் என்ன? சமூக வலைத்தளத்தில் இனத்தை இழிவுப்படும் வகையில் பதிவு செய்யும் நபர்களின் செயலை நிறுத்த நாம் சொந்தமாகவே அவர்களின் கணக்கின் மீது புகார் செய்யலாம் என்றார்.
இதற்கிடையே இந்து பணிக்குழுவின் தோற்றுநர் ஜனா கூறுகையில், நம் சமயம், வழிப்பாட்டு முறை ஆகியவற்றை பயன்படுத்தி மூட் நம்பிக்கையை ஏற்படுத்தும் சமூக வலைத்தளத்திலுள்ளவர்கள் மீது எம்சிஎம்சியிடம் புகார் அளிக்கப்படும் என்றும் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் எனவும் சொன்னார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து இதுவரை 10 போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்து பணிக்குழு இதர இந்த சமய அமைப்புகளுடன் இணைந்து சமுதாயத்திற்கு உதவுவதுடன் சமயத்தை காப்பாற்றவும் பாடுபடும் என்றார்.
0 Comments