loader
பிபிபி-யும் பல்லின உறுப்பினர்களை கொண்ட கட்சிதான்! மக்களின் தேர்வாக எங்களையும் மாற்றிக் காட்டுவோம்! தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்வோம்! -டத்தோ லோகபாலா

பிபிபி-யும் பல்லின உறுப்பினர்களை கொண்ட கட்சிதான்! மக்களின் தேர்வாக எங்களையும் மாற்றிக் காட்டுவோம்! தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்வோம்! -டத்தோ லோகபாலா

 

கோலாலம்பூர், ஜூன் 21-
பல்லின உறுப்பினர்களை கொண்ட எங்களில் பிபிபி கட்சியை மக்களின் தேர்வாக கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும்  வாய்ப்புகளை எங்களால் உருவாக்கிக் கொள்ளவும் தாயாராக இருப்பதாக பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

அடிப்படையில் கட்சியை வலுப்படுத்த நாம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தற்போது கட்சியில் 370,000 உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த பொதுத் தேர்தலுக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கட்சியை வலுப்படுத்தி காட்டுவோம் என அவர் சொன்னார்.

பிபிபி கட்சியின் கூட்டரசு பிரதேச மாநிலத்தின் கட்சி மாநாடு இன்று மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள பிடி 80 கட்டட மண்டபத்தில் நடைப்பெற்றது. மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

நாடு சுரந்திரம் அடைந்த நாள் முதல் இன்று நம் சமுதாயத்திற்கு தேவையானது கிடைக்கவில்லை என அரசாங்கத்தை குறைச்சொல்வதை நாம் நிறுத்த வேண்டும். குறைக்கூறுவதை நிறுத்தி விட்டு குறைகளை நிவர்த்தி செய்யும் வேலையை முன்னெடுக்க வேண்டும். இதற்கு முக்கியமாக நம் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாங்கத்தையும் பிரதிநிதியையும் நாம் தேர்வு செய்வது அவசியம்.

புதிய அரசாங்கத்தை நாம் தற்போது தேர்வு செய்துள்ளோம். அன்று முதல் இன்று வரை மக்களின் அடிப்பை தேவைகளான உணவுப் பொருள், எரிவாயு, மின் கட்டணம் என அனைத்தும் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் மக்களும் இன்னல்களுக்குள்ளாகி வருவதாக அவர் சொன்னார்.

இதற்கிடையில் பிபிபி கட்சியின் விலாயா மாநில தலைவர் சத்தியா சுதாகரன் கூறுகையில், கட்சியை வலுப்படுத்த தலைவர் கூறிவது போல் ஒற்றுமையை வலுப்படுத்துவதுடன் உறுமாற்றத்தையும் கொண்டு வர வேண்டும் என்றார்.

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலை சந்திக்கும் முன்பே நாம் நமது பிரதிநிதியை அடையாளம் காண வேண்டும். அதற்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வரை உழைக்க வேண்டும் என சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

0 Comments

leave a reply

Recent News