loader
இதிகாச நாயகி 'திரௌபதி' பிரம்மாண்ட மேடை நாடகம்!  நாடக கலை நாட்டில் குறைந்து வருகிறது!

இதிகாச நாயகி 'திரௌபதி' பிரம்மாண்ட மேடை நாடகம்! நாடக கலை நாட்டில் குறைந்து வருகிறது!

கோலாலம்பூர், ஜூன் 16-
நாட்டில் நாடக கலையின் தாக்கம் குறைந்து வருவதாக லாஷா ஆர்ட்ஸ் அக்காடமியின் தோற்றுநர் டாக்டர் பாலதர்மலிங்கம் தெரிவித்தார்.

இந்த நிலை இங்கு மட்டும் அல்ல தமிழகத்திலும்தான் மேடை நாடகங்கள் நடத்துவது குறைந்து வருகிறது. திரைப்படங்களின் வருகையின் தொடர்ச்சியாக நாடக கலைகள் குறைந்ததாக அவர் சொன்னார்.

அந்த வகையில் இதிகாச நாயகி திரௌபதி மேடை நாடகத்தை மலேசிய பாரதி தமிழ் மன்றம், லாஷா ஆர்ட்ஸ் அக்காடமி, தமிழகத்தின் கோமல் தியேட்டர் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றனர்.

இந்த மேடை நாடகம் வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் டெம்பல் ஆப் பைன்ஸ் ஆட்சில் மாலை 3.30 மணிக்கும் 6.30 மணிக்கும் இரு காட்சிகளாக நடைப்பெறவுள்ளது.

இந்த மேடை நாடகத்திற்கு ராஜ்குமார் பாரதி இசையமைக்கவுள்ள வேளையில், தாரனி கோமல் இயக்கத்தில் வசணத்தை சதிஸ்குமார் எழுதியுள்ளார். இந்த புரண கதை பிரமாண்ட காட்சியின் அடிப்படையில் ஒரு சிறந்த மேடை நாடகமாக வழங்கப்படவுள்ளது.

பெண்களின் சிறப்பு இயல்புகள், பெண்ணின் திறன், சாதனை ஆகியவற்றை வெளிக்கொனர இந்த மேடை நாடகம் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறையில் நம் நாட்டில் நடைப்பெறவுள்ளது என அவர் சொன்னார்.

இந்த மேடை நாடகத்திற்கான நுழைவுச் சீட்டுகளை CloudJoi டிக்கெட் விற்பனை அகப்பக்கத்தில் வாங்கிக்கொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கு ஆர்.டி.தியாகராஜன் (012-780 9390), பி.பார்த்தசாரதி (016-326 3002), டாக்டர் பாலதர்மலிங்கம் (016-441 1266) என்ற எண்களுடன் தொடர்புக் கொள்ளலாம்.

0 Comments

leave a reply

Recent News