கோலாலம்பூர், ஜூன் 13-
மூன்று வெள்ளியில் மூன்று வெற்றி வாய்ப்புகளை உள்ளடக்கிய புத்தம்புதிய பிக் ஸ்வீப் டிக்கெட்டுகளை இன்று பான் மலேசிய ஸ்வீப்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.
பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் தங்களின் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க வகை செய்யும் நிறுவனங்களில் ஒன்றான பான் மலேசிய ஸ்வீப்ஸ் நிறுவனம், நேற்று ஜூன் 12ஆம் நாள், கோலாலம்பூர் இம்பி வட்டாரத்தில் Kamuning சாலை, Tslaw Tower வர்த்தகக் கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டத்தில் இதன் தொடர்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.
இதன் தொடர்பில் பான் மலேசிய ஸ்வீப்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி Sim Kok Soon செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
மூன்று வெள்ளிக்கு வாங்கும் பிக் ஸ்வீப் டிக்கெட்டில் முதல் பரிசாக வெள்ளி இரண்டு மில்லியன் கிடைக்க வாய்ப்புள்ளது.
அடுத்து 'Instant Scratch' வாய்ப்பின் வழி வெள்ளி ஒரு லட்சம் அதிர்ஷ்ட தொகையை வெல்வதற்கான பொன்னான வாய்ப்பு உள்ளது.
மூன்றாவது வாய்ப்பாக வெள்ளி 8,888; வெள்ளி 888; வெள்ளி 88 என மூன்றடுக்கு பணப் பரிசுகளை வெல்லும் வெற்றி வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.
பான் மலேசிய ஸ்வீப்ஸ் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள இந்த புதிய அதிர்ஷ்ட அத்தியாயத்தில், மில்லியன் கணக்கில் பணப்பரிசு, அந்த நிமிடமே உங்களின் அடுத்த அதிர்ஷ்ட வாய்ப்பை பரிசோதித்துப பார்க்கும் பொன்னான வாய்ப்பு, மூன்றாவதாக மூன்று அடுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு என வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி வழங்குவதில் பான் மலேசிய ஸ்வீப்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது என்று சிம் கோக் சூன் மேலும் தெரிவித்தார்.
0 Comments