loader
உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது; 15 பேர் பலி!

உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது; 15 பேர் பலி!

கோலாலம்பூர், ஜூன் 9 –

சுல்தான் இட்ரிஸ் (UPSI) பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சென்ற பேருந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில்  அதில் பயணம் செய்த15 மாணவர்கள்  உயிரிழந்தனர். மேலும் 7 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை பேராக், தாசிக் பந்திங் அருகே உள்ள  கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ளது.

48 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து எதிரில் வந்த புரோடுவா அல்ஜா ரகக் காரை மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து மற்றும்  எம்பிவி ரகக் காரில் பயணித்த அனைவரும்  ஹஜ் பெருநாள் விடுமுறையை தங்களின் பிறந்த இடத்தில் கழித்து விட்டு  ஜெலி கிளாந்தான்  மாவட்டத்திலிருந்து கிரிக் பாதையில் தஞ்சோங் மாலிமிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளதாக
பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் இயக்குநர் சயானி சையிதோன் தெரிவித்தார்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெரும்பாலும் திரங்கானு மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஜெர்டே பகுதியில் ஒன்றுகூடி தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்து தஞ்சோங் மாலிமிற்கு திரும்பி வந்ததாக  UPSI பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் நோர்காலிட் சாலிமின் தெரிவித்தார். மேலும் தற்போது ஏற்ப்பட்டுள்ள இந்த துயரச் சம்பவம் மலேசிய மாணவர் சமூகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என அவர் வருத்தம் தெரிவித்தார்.

- காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News