ஷா ஆலாம், ஜூன் 6-
பிரபல நடிகர் மற்றும் பாடகர் ஒருவர் 17 வயது இளம் பெண்ணை தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் போலீஸ் தரப்பில் மேற்கொண்ட விசாரணை தொடரவுள்ளது.
தற்போதைய போலீஸ் விசாரணையின் வழி அந்த நபர் தனது முதல் சந்திப்பின்போதே அப்பொண்ணிடம் பாலியல் ரீதியான தொல்லையை கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட கலைஞரும் பாதிக்கப்பட்ட மாணவியும் சுமார் இரண்டு மாதங்களாக பரஸ்பர தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது அவர்கள் இருவருக்கு இடையிலான முதல் நேரடி சந்திப்பு ஆகும்.
இந்த குற்றச்சாட்டில் சந்தேகிக்கப்படும் அந்த நபர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடமிருந்து நாங்கள் வாக்குமூலம் பெற்றுள்ளோம். தற்போது அவருக்கு போலீஸ் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் கூறினார்.
விசாரணை அறிக்கை முழுமையாக தயாராகிவிட்டது. அதனை விரைவில் அரசு துணை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்க உள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.
பிரபல நடிகர் மற்றும் பாடகர் ஒருவர், ஒரு 17 வயதுடைய சிறுமிக்கு ஓட்டலில் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் ஒரு கேஃபேவில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது அந்த நடிகரை அவர் சந்தித்துள்ளார். சில முறை சந்திப்புகளுக்கு பின் அந்த நடிகர் அப்பெண்ணை தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை பெண் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றப்பிரிவு (D11), புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் மூத்த உதவி ஆணையர் சிட்டி கம்சியா ஹசான் உறுதி செய்துள்ளார்.
இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டின் குழந்தைகள் மீதான பாலியல் குற்றச் சட்டத்தின் பிரிவு 14 (a) (சட்டம் 792) அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
0 Comments