loader
ஜிவி ரைட் இ-ஹைலிங் சேவைக்கு  விரைவில் மின்சார கார்கள்!

ஜிவி ரைட் இ-ஹைலிங் சேவைக்கு விரைவில் மின்சார கார்கள்!

காஜாங், மே 31-
ஜிவி ரைட் இ-ஹைலிங் சேவைகளுக்கு முழுமையாக மின்சார கார்களை பயன்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபீர் மான் தெரிவித்தார்.

காஜாங்கில் நடைபெற்ற ஜிவி ரைட் இ-ஹைலிங் நிறுவனத்தின் ஓட்டுநர்களுக்கான பரிசளிப்பு விழாவில் போசிய அவர் இந்த அறிவிப்பை தெரிவித்தார்.

நாட்டில் புதியதாக தொடங்கப்பட்ட ஜிவி ரைட் இ-ஹைலிங் நிறுவனம் தற்பொழுது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு தனது ஓட்டுனர்களின் அர்ப்பணிப்பும் சிறந்த செயல்திறனும்  முக்கிய காரணம் என கபீர் தெரிவித்தார்.

அந்த வகையில் தனது ஓட்டுனர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் காயோ டான் மெனாங் 2025 எனும் திட்டத்தை உருவாக்கி, பிரோடுவா பேசா கார் உட்பட ரொக்க பணம் பரிசுகளை ஜிவி ரைட் இ-ஹைலிங் வழங்கி  அவர்களை ஊக்குவித்துள்ளது.

விரைவில் ஜிவி ரைட் சாதாரண கார் பயன்பாட்டில் இருந்து முழுமையாக மின்சார கார்கள் பயன்பாட்டிற்கு மாறும்.
இந்த மின்சார கார்களை தனது ஓட்டுனர்கள் வாடகைக்கும் அல்லது வாங்குவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது.

இவ்வேளையில் கோலாலம்பூர் மற்றும் சுபாங் வட்டார வாடிக்கையாளர்களுக்கு இலவச கட்டண சேவையை  ஜிவி ரைட் வழங்குகிறது.குறிப்பாக மலாயா பல்கலைக்கழகம் மற்றும் உலு லாங்காட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வழி மாணவர்கள் பயன் பெறுவார்கள் என கபீர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News