loader
இரண்டாவது அமைச்சராக நிக் நஸ்மி பதவி ராஜினாமா!

இரண்டாவது அமைச்சராக நிக் நஸ்மி பதவி ராஜினாமா!

கோலாலம்பூர், மே 28-
இயற்கை வளச் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சமர்ப்பித்ததாக செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

அவரது ராஜினாமா ஜூலை 4 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான் நாளை மே 29 முதல் ஜூலை 3 வரை விடுப்பில் இருப்பேன், என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கெஅடிலான் கட்சியின் முன்னாள் உதவித் தலைவராக இருந்த நிக் நஸ்மி, கட்சித் தேர்தலில் அந்தப் பதவியை இழந்ததைத் தொடர்ந்து அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவது குறித்து முடிவெடுத்ததாக  அவர் அந்த பதிவில் தெரிவித்தார்.

அவர் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கை வளச் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராக நியமிக்கப்பட்டார் .

இரு முக்கிய அமைச்சர்களின் பதவி விலகல் ஆளும் கூட்டணிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய சமுதாயத்தை பிரதநிதித்து தமிழ் பேசும் அமைச்சர் அமைச்சரவையில் நியமிக்கப்படவாரா என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.

0 Comments

leave a reply

Recent News