புத்ராஜெயா, மே 28-
கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நூருல் இசாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இன்று முதல் தானது பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ரபிஸி ரம்லி ரம்லி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சமர்பித்துள்ளார்.
கெஅடிலான் தேர்தலின் போது கட்சியின் துணைத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள தவறியதனால், அமைச்சர் பதவியிலிருந்து விலகி சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவேன் என ரபிஸி அறிவித்துள்ள்ளார்.
அதன் அடிப்படையில் கட்சியின் உயர்மட்டத் தலைமையில் இல்லாத ஒருவர் அமைச்சரவைப் பதவியை வகிப்பது பொருத்தமற்றது என்று தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
எனது ராஜினாமா வரும் ஜூன் 17ஆம் தேதி அமலுக்கு வரும். இன்று முதல், ஜூன் 16ஆம் தேதி மீதமுள்ள வருடாந்திர விடுப்பில் இருப்பேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கெஅடிலான் தொகுதி அளவிலான தேர்தலில் ரபிசிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் பல நபர்கள் போட்டியில் தோல்வியடைந்த பிறகு,
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் இருந்து அவர் ராஜினாமா செய்யப் போவதாக ஊகங்கள் பரவத் தொடங்கின.
தற்போது அந்த ஊகங்கள் உண்மையாகி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
0 Comments