loader
இந்திய மாணவர்களுக்கான  மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை! கல்வி அமைச்சுக்கு டத்தோஸ்ரீ எம். சரவணன் கடிதம்

இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை! கல்வி அமைச்சுக்கு டத்தோஸ்ரீ எம். சரவணன் கடிதம்

புத்ராஜெயா, மே 23-

இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு விண்ணப்பித்த மற்றும் வழங்கப்பட்ட எண்ணிக்கையை கல்வியமைச்சு விரிவாக விவரிக்க வேண்டும் என மஇகாவின் துணைத் தலைவர் எம். சரவணன் இன்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்கிற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ஆண்டிற்கான மெட்ரிகுலேஷன் இடங்களுக்கு இந்திய மாணவர்கள் பரிசீலிக்கப்படவில்லை எனும் புகார்களின் அடிப்படையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை, இடம், பெற்றோர் மற்றும் மறுக்கப்பட்டோர் ஆகிய விவரங்களை வழங்குமாறு கல்வி அமைச்சரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த 2018 ஆம் ஆண்டில்  700க்கும்  கூடுதல் இடங்களை அறிவித்ததன் மூலம் மொத்தம் 2,200 இடங்கள் இந்திய மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பலர் இடமில்லாமல் உள்ளதாகக் கூறி மஇகாவை அணுகியுள்ளனர் என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெளிப்படைத்தன்மை இல்லாதது இந்திய சமூகத்திலிருந்து ஏராளமான புகார்களுக்கு வழிவகுத்தது.

இந்த மாணவர்களில் பலர் குறைந்த வருமானம் கொண்ட பி40 சூழலில் இருந்து வருகிறார்கள். அங்கு கல்வி மட்டுமே வறுமையிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

இந்த நிலைமை தொடர்புடைய அமைச்சின் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்த சமூகத்தின் கவலைகளை எடுத்துக்காட்டுகிறது.

இதனை அடிப்படையாக கொண்ட டத்தோஶ்ரீ சரவணனின் கடிதம் இன்று மதியம் புத்ராஜெயாவில் உள்ள கல்வியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News