loader
சுய லாபத்திற்காக கட்சியை பலிகெடாவாக ஆக்காதீர்! -புஸியா சாலே

சுய லாபத்திற்காக கட்சியை பலிகெடாவாக ஆக்காதீர்! -புஸியா சாலே

ஜொகூர் பாரு, மே 23-
சொந்த லாபத்திற்காகவும் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம் என்று  இளைஞர் (ஏஎம்கே) மற்றும் மகளிர் பிரிவுகளுக்கு பிகேஆர் பொதுச் செயலாளர் புஸியா சாலே நினைவூட்டினார்.

ஜோகூர் பாருவில் பிகேஆர் ஏஎம்கே மற்றும் மகளிர் வருடாந்திர தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய உரையில், புஸியா பிகேஆரை ஒரு முக்கியமான இடத்திற்குச் செல்லும் கப்பலுடன் ஒப்பிட்டார்.

நாம் பயணிக்கும் கப்பலில் துளை துளைப்பவர்கள் போல் யாரும் செயல்பட வேண்டாம். இது நம் கட்சி. சுய லாபத்திற்காக நாம் பயணிக்கும் இந்த கப்பலில் (கட்சி) துளை துளைத்தால் நாம் அனைவரும் மூழ்கி விடுவோம் என அவர் வலியுறுத்தினார்.

பிகேஆர் என்ற இந்த கப்பல் ஓரிரு நாளில் உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக பலரின் தியாகம், கண்ணீர், சிறை வாசம் என பல போராட்டத்திற்கு மத்தியில் ஒருவாக்கப்பட்ட கட்சி இதுவாகும்.

ஒரு காலத்தில் நம் கட்சி சிறுபான்மை ஆதரவை கொண்ட கட்சியாக வர்ணிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆட்சிப் பீடத்தில் நாம் இருப்பதுடன் நமது தலைவர் நாட்டின் பிரதமராக உள்ளார். பல இன்னல்களுக்கு மத்தியில் நாம் இந்த இடத்தை அடைந்துள்ளோம். ஆகையால் யாரும் இந்த கப்பலில் துளையை ஏற்படுத்த வேண்டாம் என அவர் நினைவுறுத்தினார்.

நமக்கும் நடக்கும் போட்டி சகோதரர் தன்மையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் பிகேஆர் கட்சியை நேசிப்பவர்கள். கட்சியை வலுப்படுத்தும் அளவில் நமது அனைவரின் செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என புஸியா தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

0 Comments

leave a reply

Recent News