loader
பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் இன்பம் பொங்கும் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்.

பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் இன்பம் பொங்கும் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்.

பத்துமலை, மே 19-
2025 ஆம் ஆண்டின் ஆசிரியர் நாள் கருப்பொருளான ‘ஆசிரியர் கல்வி மறுமலர்ச்சியின் ஊக்குநர்’ என்பதனை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்ட ஆசிரியர் தினம் கலை கட்டியது.

ஆசிரியரும் மாணவர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆண்டுதோறும் காத்திருக்கும் இனிய நாளும் இதுவாகும். ஆசிரியர்களின் அறப்பணிகளுக்கு மணிமகுடம் சூட்டும் நன்நாள் இதுவே.

கடந்த 16 மே 2025 (வெள்ளி) பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் திட்டமிட்டப்படி மிகச் சிறப்பாய் ஆசிரியர் தினம் மாணவர்களின் ரோஜா மலர் அணிவகுப்புடன் பூ பூக்கும் ஓசையுடன்  கொண்டாடப்பட்டது. பள்ளியின்  ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களாக விளங்கும் ஆசிரியர் இராஜீவி த/பெ வீரன்,ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும்  இக்கொண்டாட்டம்  பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. எந்த ஆண்டும் இல்லாத குதூகலமும் கோலாகலமும்  இவ்வாண்டு ஆசிரியர் தினத்தில் நிறைந்திருந்தது.

இந்த கொண்டாட்டத்தின் முதல் அங்கமாக ஆசியர்களின் பாரம்பரிய உடை அணிவகுப்பு, மாணவர்களின் கலாச்சார நடனத்துடன் நடனத்துடன் துவக்கம் கண்டது. பத்துமலை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி த/பெ செங்கல்ராயன் அவர்கள்  கல்வி அமைச்சின் ஆசிரியர் தின சிறப்புரையை ஆற்றினர்.

ஆசிரியர்களை மகிழ்விக்கும் வகையில்மாணவர்கள் பாரம்பரியத்தை அடையாளம் காட்டும் வண்ணம் மாணவர்கள் தங்களின் தனித்திறமையை இயல் இசை நாடகத்தின் வழி வெளிகாட்டினர்.

கொண்டாட்டத்தின் இறுதியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இக்கொண்டாட்டம் இனிதே நடைபெற எல்லா வகையிலும் உதவிகள் புரிந்த பள்ளியின் அறங்காவலர் தான் ஶ்ரீ டத்தோ டாக்டர் R.நடராஜா, மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம் ,பெற்றோர் நல்கைத் திட்ட உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் எந்நேரமும் பக்கபலமாய் இருப்பதாக தலைமையாசிரியை திருமதி சரஸ்வதி த/பெ செங்கல்ராயன் அவர்கள் உறுதியாகக் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News