கோலாலம்பூர், மே 18-
உலகத்தில் தற்போது தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்டு வருவதற்கேற்ப நம் சமுதாயமும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென விலாயா மாநில மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் வலியுறுத்தினார்.
இன்றைய நிலையில் டிக் டாக் வலைத்தளத்தில் வியாபார வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதேபோல் அந்த வியாபார வாய்ப்புகளின் வழி அதிகமான வருமானமும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பினை நம் சமுயாத்தினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் சொன்னார்.
அந்த வகையில் விலாயா மாநில மஇகா ஏற்பாட்டில் டிக் டாக் வழி வியாபாரம் என்ற பயிற்சி பட்டரை இன்று மஇகா நேதாஜி மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த பயிற்ச்சி பட்டரையில் 150 பேர் கலந்து கொண்டதாக அவர் சொன்னார்.
டிக் டாக்கில் எபிலேட்டார் ஆகுவது பற்றிய அடிப்படை பயிற்சி இன்று வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை பயிற்றுநர் காயத்திரி கிருஷ்ணன் வழிநடத்தினார்.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களிடம் அடுத்தக்கட்ட பயிற்சியை பெற விருப்பம் உள்ளதா என டத்தோ ராஜா சைமன் கேட்டபோது, அனைவரும் விருப்பம் உள்ளதாக கூறினர். அதனை தொடர்ந்து அடுத்த பயிற்சி வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார். இந்த பயிற்சி ஒரு நாள் பயிற்சியாக நடைப்பெறவுள்ளதால் இதில் கலந்து கொள்பவர்களும் உணவுகளையும் விலாயா மாநில மஇகா ஏற்பாடு செய்து தருவதாக அவர் சொன்னார்.
தொழில்நுட்ப மாற்றத்தை நோக்கி உலகம் பயணிக்கும் நேரத்தில் நாமும் அதற்காக நம்மை தாயார் நிலைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஆகையால் இதுபோன்ற இணையம் வழியான வியாபார வாய்ப்புகளிம் நம்மவர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது அவசியம். அதற்காகதான் இந்த முயற்சியை முன்னெடுத்ததாக அவர் மேலும் சொன்னார்.
இந்த பயிற்சியின் ஏற்பாட்டளாரான லெம்பா பந்தாய் தொகுதித் தலைவர் வி.கனேஷ் கூறுகையில், விலாயா மாநில மஇகா ஏற்பாட்டில் இரு பயிற்சிகளை நடத்த தலைவர் தன்னிடம் பணித்தாக அவர் சொன்னார். முதல் கட்ட பயிற்சி இந்த டிக் டாக் வியாபார வாய்ப்பு பயிற்சியாகும். அடுத்தது தலைமைத்துவ பயிற்சியை ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
செய்தி: காளிதாசன் தியாகராஜன் - காளிதாசன் இளங்கோவன்
0 Comments