loader
சட்டவிரோத அந்நிய வியாபாரிகளை ஒழித்துகட்டும் வரை  ஓயமாட்டோம்!   - டத்தோ கோபாலகிருஷ்ணன்

சட்டவிரோத அந்நிய வியாபாரிகளை ஒழித்துகட்டும் வரை ஓயமாட்டோம்! - டத்தோ கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர் நவம்பர்-22

மைக்கி எனப்படும் இந்திய வர்த்தகச் சம்மேளனத்தின் 68-வது போராளர் மாநாடு தலைநகர் சிட்டிடெல் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

நாடு தாளுவிய அளவில் இருந்து மைக்கி பேராளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

மாநாட்டில் உரையாற்றிய மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் பேசுகையில்,  மைக்கியின் உறுப்பிய சந்தாவை சற்றுக் குறைத்தால் புதிய வர்த்தகர்கள் அதிகமானோரை இவ்வியக்கத்திற்குள் இணைக்கலாம்  எனக் கூறினார். 

மேலும் மைக்கி பொதுச் செயலாளர் டத்தோ ஏ.டி குமாரராஜா அதிகமான இளைஞர்களைச் சங்கத்திற்குள் சேர்த்து வருகிறார்  என்று குறிப்பிட்டார்.

இளம் வர்த்தகர்களுக்கான பயிற்சியை வழங்க மித்ராவிடம் மைக்கி பரிந்துரை செய்துள்ளது. விரைவில் இதற்கான சிறப்பு நிதி மித்ராவிடம் இருந்து கிடைக்கும். அதோடு கார்னிவெல் என்ற பெயரில் இங்குச் சட்டவிரோதமாக வியாபாரம் செய்யும் அந்நிய வியாபாரிகளுக்கு எதிராக வர்த்தகச் சங்கங்களுடன் மைக்கி இணைந்து,  தொடர்ந்து எதிர்க்கும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காத வரை ஓயமாட்டோம் என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மைக்கிக்கு  என்று தலைநகரில் புதிய கட்டடம் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும்  இன்று நடைபெற்ற மாநாட்டில் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News