loader
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் KVT கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது!

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் KVT கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது!

கோலாலம்பூர், ஜன. 18-
இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தகத் தளமாக விளங்கி கொண்டிருக்கும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இன்று கே.வி.டி. கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

கேவிடி கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகையின் உரிமையாளர் தங்கதுரையின் இது மூன்றாவது நகைக்கடையாகும்.

மஸ்ஜிட் இந்தியாவில் இரு தங்க கடைகள் வெற்றிகரமாக இயங்கி வரும் வேளையில் தற்பொழுது அதன்  மூன்றாவது தங்க மாளிகை மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது.

இன்று KVT கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகையின் திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

அதாவது 5 ஆயிரம் வெள்ளிக்கு தங்கம் வாங்கினால் இலவச தங்க காசும், 3 ஆயிரம் வெள்ளிக்கு தங்க மூக்குத்தியும், டைமன் வாங்கினால் பற்றுச்சீட்டும் வழங்கப்படும் என தங்கதுரை தெரிவித்தார்.

KVT கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகையானது உங்களின் குடும்பக் கடையை போன்றது. திருமணம் போன்ற அனைத்து சுப காரியங்களுக்கும்  புதிய டிசைன்களிலும், நியாயமான விளையிலும் தங்க நகைகளை வாங்கி பயன் பெறலாம் என அவர் தெரிவித்தார்.

ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர்.நடராஜா ஆகியோர் இந்த  கேவிடி தங்க மாளிகையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பிரிக்பீல்ட்ஸ் வட்டார வர்த்தகர்கள் உட்பட பல சிறப்பு பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News