கோலாலம்பூர், ஜன.17-
தோட்டப்புர தமிழ்ப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அவர்களின் கடந்த காலத்தை நினைத்து பார்க்க வைக்கும் திரைப்படமாக தமிழ் ஸ்கூல் பசங்க திரைப்படம் அமைந்துள்ளது.
ஆரம்பப்பள்ளி பருவத்தில் நாம் செய்த குறும்புகள், தோட்டபுர சூழ்நிலை, மறக்க முடியாத பல நினைவுகளை இந்த உள்ளூர் திரைப்படும் நமக்கு மீண்டும் நினைவூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தோட்டப்புர தமிழ்ப்பள்ளிகளில் அன்று போல் இன்று மாணவர்களின் எண்ணிக்கை இல்லை. நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. இதனால் ஏற்படும் விழைவினை முன்வைத்து இத்திரைப்படத்தை இயக்குநர் ஷான் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை வீடு புரோடக்ஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை எப்படி முன்னேற செய்வது என்பதும் இத்திரைப்படத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ஆசிரியராக நடித்துள்ள நடிகர் டினேஸ்குமார் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளர். அவர் மட்டுமின்றி இத்திரைப்படத்தில் நடித்துள்ள கலைஞர்களும் மாணவர்களும் அவர்களின் சிறந்த படைப்பை வழங்கியுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்,முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் ஆகியோர் சிறப்பு வருகையளித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக அவர்களின் பள்ளி பருவ காலம் கண் முன் தெரியும் என்றுதான் கூற வேண்டும். அதிலும் தோட்டப்புர தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிபருத்திற்கு சென்றதுபோல் தோன்றும் என்றுதான் கூற வேண்டும்.
இத்திரைப்படும் இம்மாதம் 23ஆம் தேதி முதல் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இத்திரைப்படத்தில் ஆசிரியாக யஷ்மின் நடியா,குபேன் மகாதேவன், விடியா லியானா, பென்ஜி, மலர்விழி, வீரசிங்கம் ஆகியோருடன் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை மேலும் மெருகூட்டவும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலும் குபேன் மகாதேவனின் நகைச்சுவை காட்சிகள் அமைந்துள்ளன.
நமது பள்ளி பருவத்தை நினைவுக்கூற நினைப்பவர்கள் இத்திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தை Veedu Production நிறுவனத்தின் உரிமையாளர்களான டினேஸ்குமார், டாக்டர் விமலா தம்பதியர் வெளியிட்டுள்ளனர்.
அதிலும் தோட்டப்புர வாழ்க்கை, சூழல் ஆகிய காட்சிகள் மறக்க முடியாத நினைவுகளாக நமக்கு அமையும் என்றுதான் கூற வேண்டும்.
இத்திரைப்படத்தின் நடிகர்களின் பெயர் ஒளிப்பரப்பப்படும் காட்சியின் போது நாம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஏன் என தெரிந்துகொள்ள வேண்டுமா? அடுத்த வாரம் வரை காத்திருந்து, தமிழ் ஸ்கூல் பசங்க திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
செய்தி: காளிதாசன் தியாகராஜன்
படம்: காளிதாசன் இளங்கோவன்
0 Comments