கோலாலம்பூர்,ஜன.16-
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் சுந்தர்.சி. இயக்கிய மதகஜராஜா திரைப்படம் தற்போது உள்நாட்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு மலேசியாவில் இத்திரைப்படத்தை வெளியிடும் எம்.எஸ்.கே நிறுவனம் இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நேற்று வழங்கியது.
பத்திரிகையாளர்கள், சிறப்பு பிரமுகர்கள், உள்ளூர் கலைஞர்கள் என பலர் இந்த சிறப்பு காட்சியை காண வந்திருந்தனர்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜொமினி இயக்குநர் சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் இந்த சிறப்பு காட்சிக்கு வருகையளித்திருந்தார். மேலும் இத்திரைப்படம் மக்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பதாக நம் நாட்டில் இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ள எம்.எஸ்.கே. நிறுவனத்தின் உரிமையாளர் சாரதா சிவலிங்கம் தம்பதியர் தெரிவித்தனர்.
நடிகர் சந்தானத்தின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். தற்போது அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இருந்தபோதும் அவர் நகைச்சுவை நடிகராக நடித்த காலத்தில் அவருக்கு அதிக மாஸ் என்றுதான் கூற வேண்டும்.
அந்த வகையில் நடிகர் சந்தானத்தை மீண்டும் நகைச்சுவை நடிகராக காணும் சந்தர்ப்பத்தை இத்திரைப்படம் வழங்கியுள்ளது.
வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை இந்த திரைப்படத்தில் பிஸாஸ் பொய்ன் ஆகும்.
மேலும் நண்பர்களின் உரவு, நட்புக்காக எதையும் செய்ய துடிக்கும் திரைப்படத்தின் கதாநாயகன் விஷால், கண்களுக்கு குளிர்ச்சியாக நடிக்கும் நடிகை அஞ்சலி மற்றும் வரலெட்சுமியின் நடிப்பு ஆகியவை இத்திரைப்படத்திற்கு சிறப்பை ஏற்படுத்துகிறது.
இசையமைப்பாளர் விஜய் அந்தோனியின் இசையில் அமைந்துள்ள பாடல்கள், பின்னணி இசை இன்னும் இத்திரைப்படத்தை மெருகூட்டியுள்ளது.
குடுபத்தினருடன் வயிறு குலுங்க சிறித்து மகிழ இந்த திரைப்படம் காண மக்கள் திரையரங்குகளுக்கு வரலாம்.
0 Comments