பெட்டாலிங் ஜெயா,ஜன.11-
நாட்டின் முதன்மை தங்க முதலீட்டு நிறுவனமாம பப்லிக் கோல்ட் நிறுவனத்தின் டபள் டைமண்ட் அங்கீகார விழா சன்வே மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்றது.
இந்த தங்க முதலீட்டு நிறுவனத்திற்கு நாடு தழுவிய அளவில் 18 கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் தலைமையகம் தலைநகர் ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்தோனேசியாவிலும் கிளைகள் உள்ளன.
இந்த நிறுவனம் தங்கம் மட்டுமின்றி வெள்ளி முதலீட்டிலும் கடந்த 17 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதன் வருமானம் மட்டுமே வெ.17.5 பில்லியன் ஆகும். அந்த தொகையில் வெ.300 மில்லியன் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள், தொழில்முனைவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தோற்றுநர் மற்றும் தலைவருமான டத்தோ வீரா லியுஸ் எங் தெரிவித்தார்.
இந்த அங்கீகார விழாவில் முகமட் ஸுல்கிப்ளி மற்றும் அவரின் மனைவிக்கு 6 ஸ்டார் டபள் டைமண்ட் விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி வெ.864,862.12 மதிப்புடைய பரிசுகளும் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து அஸிஸா ஹசானுக்கு 5 ஸ்டார், எமெரல்ட், மர்லியா மற்றும் அவரின் கணவருக்கு 4 ஸ்டார் எமெரல்ட் என மொத்தமாக 14 பேருக்கு டபள் டைமண்ட விருதுகள் வழனங்கப்பட்டன.
இதற்கிடையில் உலக அளவில் பப்லிக் கோல்ட் நிறுவனத்திற்கு தற்போது உலகளவில் 26 கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் கீழ் 1.55 மில்லியன் பதிவுப்பெற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அதுமட்டுமின்றி பப்லிக் கோல்ட் நிறுவனத்தின் பண பட்டுவாடா இயந்திரம் தயாரிப்பு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் 50 பண பட்டுவாடா இயந்திரங்கள் சுபாங் அனைத்துலக விமான நிலையம், பேரங்காடிகள் என நாட்டிலுள்ள முதன்மை இடங்களில் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இதற்கிடையில் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட டத்தோ வீரா லியுஸ் எங், கடின உழைப்பை வழங்கி வாழ்க்கையில் வெற்றிக் கண்டு வரும் அனைத்து உறுப்பினர்களையும் பாராட்டினார்.
0 Comments