loader
C4 CINTA யாருடைய நடிப்பும் நடிப்பாகவே தெரியவில்லை !

C4 CINTA யாருடைய நடிப்பும் நடிப்பாகவே தெரியவில்லை !

கோலாலம்பூர், நவ.23-

தமிழ் சினிமாவில் கதா நாயகன் கதா நாயகிக்கு  காலம் காலமாக முக்கியதுவம் கொடுப்பது வழக்கம்.

ஆனால் C4 CINTA என்ற நம் மலேசிய தமிழ் படம் கதைக்கும் அந்த கதாநாயகன் - கதாநாயகி-யை  சுற்றி இருக்கும் நட்சத்திரங்களிடம் அந்த கதையின் சக்தியை ஒப்படைத்தது அருமை.

இந்த படத்தின்  இயக்குனர்  கார்த்திக் ஷாமலனின்  தைரியத்தை அது காட்டியுள்ளது. அதற்கு முதலில் அவருக்கு பாராட்டுகள்.

நட்புக்கும் நண்பனின் தந்தை பாசத்திற்கும் நடுவில் சிக்கி அதனை அழகாக கையாளும் ஒரு நண்பன் மகனிடம் நண்பாக பழகும் ஒரு தந்தை இந்த இரு கதாபாத்திரமும் அழகு.

ஒரு பெண்ணோடு  பசங்க வைத்துள்ள நட்பை கொச்சை படுத்த  ஒரு கூட்டம் எப்போதும் இருந்தாலும் அந்த நட்பின் அன்பை அழகாக காட்டிய கதை அம்சம்.

அந்த பெண் தோழிக்கு ஒரு பிரச்சினை  என்றவுடன் அவளுக்கு பாதுகாப்பாக வந்த நட்பு நிச்சயம் வரவேற்க கூடியது.

காதலில் பெண்களின் எதிர்பார்ப்பை சொன்ன விதம் அருமை, அதே நேரத்தில் ஆண்களின் அவஸ்தையையும்  சொன்ன விதம் அருமை.

இந்த கதையின் உயிரோட்டமாக  இருந்த சுக்ரன் ( பிந்தாங் தெராங்)
மற்றும் ரூபிணி என்ற  இந்த இரு கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும்.

இசை, ஒளிப்பதிவு பாடல்கள் அனைத்தும் தரமாக உள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள்.

ஒரு காதலிலும் சரி,  நட்பிலும் சரி  அன்பு  மேலோங்கி இருந்தால் அந்த பெண்ணுக்கு அரணாக (அடி இது போதும் வருவேன் பிள்ள) என்ற பாடல் வரிக்கு ஏற்க நட்பும் காதலும் வந்து நிற்கும் என்பது கதையின் சக்தி.

கதாநாயகன் - கதாநாயகி இருவரும் அருமையான படைப்பை கொடுத்துள்ளனர். அவர்களின் படைப்புக்கு சக்தியையும் உயிரையும் கொடுத்தது அவர்களை சுற்றி இருந்த கதாபாத்திரம் என்ற பாணியில் இந்த கதை அமைக்கப்பட்டது புதுமை.

மலேசிய தமிழ் சினிமா அடுத்த கட்ட நிலைக்கு நகர்கிறது என்பதற்கு  இந்த படம் ஒரு எடுத்துகாட்டாக அமைத்துள்ளது.

இந்த படத்தில் யாருடைய நடிப்பும் நடிப்பாக தெரியவில்லை. அனைவரும் கதையை உள்வாங்கி கதாபாத்திரமாக உருவெடுத்து உள்ளனர். வாழ்த்துகள்.

-வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News