பெட்டாலிங் ஜெயா, நவ. 22-
நாட்டில் ஆறம்ப கட்டத்தில் இருந்து இளைஞர்களை கால்பந்து விளையாட்டில் ஈடுபடுத்தி பல கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறது சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவை.
தற்பொழுது அதனை தொடரும் வகையில் சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவை பரதன் கின்னம் போட்டிக்காக
விளையாட்டாளர்களை தேர்வு செய்து வருகிறது.
எதிர்வரும் சனி, ஞாயிறு நவம்பர் 23ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா Road 32 ( Cheng mo) திடலில் காலை 8.30 க்கு விளையாட்டாளர்களுகான தேர்வு நடைபெறுகிறது என சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவையின் தலைவர் மூ.சு.மணியம் தெரிவித்தார்.
ஆகவே கால்பந்து துறையில் சாதிக்க விரும்பும் இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பு கால்பந்து துறையில் அவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் புகழ்பெற்ற பரதன் கிண்ண காற்பந்து போட்டியில் நம் இந்திய விளையாட்டாளர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
அவ்வகையில் பரதன் கிண்ண விளையாட்டு வீரர்கள் 19 தடவை சாம்பியனாக வெற்றி வாகை சூடி நம் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments